எச்.பி.சி.எல். கட்டுப்பாடுகள் எதிர்த்து டேங்கர் லாரி டிரைவர்கள் 'ஸ்டிரைக்'

தர்மபுரி: அருகே எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து, டேங்கர் லாரி டிரைவர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், சிவாடியில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து, டேங்கர் லாரிகள் மூலம், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம் உட்பட, பல்வேறு மாவட்டங்களுக்கு டீசல், பெட்ரோல், எத்தனால் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் ஒப்பந்ததாரர்களின், 363 டீசல், பெட்ரோல் டேங்கர் லாரிகள், 20 எத்தனால் லாரிகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நிறுவனம் சார்பில், டேங்கர் லாரி டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை கண்டித்து நேற்று, நிறுவனத்தின் முன், டேங்கர் லாரிகளை நிறுத்தி, டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இது குறித்து, டிரைவர்கள் கூறியதாவது:
எச்.பி.சி.எல்., நிறுவன கிடங்கிலிருந்து, டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் லோடு ஏற்றி செல்கிறோம். இந்த வேலையை நம்பி, 700க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்கள் உள்ளனர்.
இந்நிலையில், டிரைவர்கள் லோடு ஏற்றியவுடன் ஒவ்வொரு, 3 மணி நேரமும் இடைநிற்றல் இல்லாமல் லாரியை ஓட்ட வேண்டும் என்றும், அவசர தேவைக்காக லாரியை நிறுத்தினால், மறுநாள் லோடு எடுக்க அனுமதிப்பதிக்க மாட்டோம் என்றும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், '60 கி.மீ., வேகத்திற்கு மிகாமல், லாரியை ஓட்ட வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, வேறு எங்கும் நிறுத்தக்கூடாது' என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நிறுவனத்தின் இச்செயல்களை கண்டித்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று காலை, 8:00 மணி முதல் மதியம், 1:45 மணி வரை, ஸ்டிரைக் நீடித்தது. அவர்களிடம், எச்.பி.சி.எல்., நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தி, கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக உறுதியளித்தனர். பின் டிரைவர்கள், ஸ்டிரைக்கை கைவிட்டு, லாரியை நிறுவனத்திற்குள் எடுத்து சென்றனர்.
மேலும்
-
பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு இபிஎஸ் வரவேற்பு
-
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்
-
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
-
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
அரசு பஸ் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
-
எங்கள் மீதான கரிசனத்திற்கு நன்றி: இபிஎஸ்க்கு சொல்கிறார் திருமா!