ராக்கெட் வேகத்தில் எகிறுது... ஆமை வேகத்தில் குறையுது; தங்கம் விலை இன்றைய நிலவரம்

2


சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3,120 அதிகரித்திருந்தது.

சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம் விலை தொடர்ந்து உச்சத் தொட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3,120 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத அளவில் ரூ.78, ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் நேற்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,805 ரூபாய்க்கும், சவரன் 78,440 ரூபாய்க்கும் விற்பனையானது.

தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் இன்று (செப் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.78,360க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9795க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி 7 நாள் தங்கம் விலை நிலவரம்

03-09-2025 - ரூ.78,360

02-09-2025 - ரூ.78,440

01-09-2025- ரூ.77,640

31-08-2025- ரூ.76,960 - விலையில் மாற்றமில்லை

30-08-2025- ரூ.76,960

29-08-2025- ரூ.76,280

28-08-2025- ரூ.75,240

Advertisement