கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்: எச்.ராஜா

சென்னை: கடவுள் இல்லை என்று கூறும் திமுக கையில் கோவில்கள் உள்ளன என்று பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
இன்று, நம் கோவில்கள் நம்மிடம் இல்லை; தி.மு.க., கட்டுப்பாட்டில் உள்ளன. கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., 40,000 ஹிந்து கோவில்களை தன் கையில் வைத்துள்ளது. உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச்செல்கிறது; முறையாக பராமரிப்பதில்லை. கோவிலை பராமரிப்பதற்கு உரிய சம்பளத்தை பூசாரிக்கு கொடுப்பதில்லை.
தி.மு.க., ஆட்சியில், ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு நடந்துள்ளது; அங்கு, கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துள்ளன. தமிழகத்தில், 9,500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்கிறது. தி.மு.க., அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களி ன் காணிக்கையில் நடத்தப்பட்டது.
அதற்கு இதுவரை கணக்கு கொடுக்கவில்லை. கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக ஹிந்துக்கள் வீதிக்கு வரவேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில், ஒரு 'தீம்' வைத்துள்ளோம். அதன்படி, 'நம்ம சுவாமி, நம்ம கோவிலை நாமே பாதுகாப்போம்!' இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்










