பாதாள சாக்கடை இணைப்பால் சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவில், வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. சேதமான சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமான பகுதியில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. எனவே, பாதாள சாக்கடை இணைப்புக்காக சேதமான சாலையை சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.வரதராஜன், காஞ்சிபுரம்.

Advertisement