பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்

காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பாக்குபேட்டை கிராமத்தில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து உள்ளன.

இதனால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, பாக்குபேட்டை கிராமத்தில், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.ஜானகிராமன், காஞ்சிபுரம்.

Advertisement