மேம்பாலத்தில் சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மையத்தடுப்பில் தெரு மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேம்பாலத்தில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு உடைந்து, கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.

சாயந்த மின்கம்பத்தை சீரமைக்காததால், இரவு நேரத்தில் அப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது.

எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த தெரு மின்விளக்கு கம்பத்தை மாற்ற வேண்டும்.

- என்.கேசவன், காஞ்சிபுரம்.

Advertisement