சிவ சாய் ஆன்மிக யாத்திரை இந்திய ரயில்வே அறிவிப்பு

சென்னை: இந்தியன் ரயில்வே சார்பில், ஜோதிர்லிங்கம், ஷீரடி, மந்திராலயம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் செல்ல, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

இந்தியன் ரயில்வே, பாரத் கவுரவ் ரயில், சவுத் ஸ்டார் ரயில் மற்றும் 'டூர் டைம்ஸ்' நிறுவனம் இணைந்து, சிவ சாய் ஆன்மிக யாத்திரை சிறப்பு ரயிலை அறிவித்துள்ளன.

பக்தர்கள், நவ பிருந்தாவனம், மந்திராலயம், பண்டரிபுரம், ஷீரடி, த்ரியம்பகேஸ்வர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அக்., 2 முதல் 12ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

பயணியரின் வசதிக்காக, மதுரையில் துவங்கி விருதுநகர், தென்காசி, புனலுார், கொல்லம், காயன்குளம், எர்ணாகுளம், திருச்சூர், ஓட்டப்பாலம், பாலக்காடு, போத்தனுார், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ஒயிட்பீல்ட் வழியே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

எனவே, ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புவோர், www.Tourtimes.in என்ற இணையதளம் அல்லது 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement