முதல்வர் கோப்பை விளையாட்டு இன்று கிரிக்கெட், பூப்பந்து, கேரம்

கரூர், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கிரிக்கெட், பூப்பந்து, கேரம் உள்பட பல்வேறு போட்டிகள் இன்று நடக்கிறது.


கரூர் மாவட்டத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பொதுமக்கள் ஆண்கள், பெண்களுக்கு கிரிக்கெட் போட்டி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பூப்பந்து போட்டி இன்று (3ம் தேதி)நடக்கிறது. கரூர் ஆபீசர்ஸ் கிளப் மைதானத்தில், அரசு பணியாளர்களுக்கான இறகுப்பந்து போட்டி, கரூர் வெண்ணைமலையில் பரணிபார்க் மெட்ரிகுலேசன் பள்ளியில் கேரம் போட்டி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்காக இன்று நடக்கிறது.

மேலும், கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கைப்பந்து போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், கரூர் ஆபீசர்ஸ் கிளப் மைதானத்தில் இறகுப்பந்து போட்டி, ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும், கரூர் வெண்ணைமலை பரணிபார்க் மெட்ரிகுலேசன் பள்ளியில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கேரம் போட்டி நாளை (4ம்தேதி) நடக்கிறது.

Advertisement