முன்விரோத தாக்குதலில் ஒருவர் கைது; 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : மூங்கில்துறைப்பட்டு அருகே முன்விரோத தாக்குதலில் 4 பேரை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவத்தில் ஒருவரை கைது செய்து, 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரை சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 25; இவர் கடந்த சில தினங்களுக்கு மது அருந்தும்போது, புத்திராம்பட்டு சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ், 25; என்பவருடன் தகராறு ஏற்பட்டது. 31ம் தேதி பிரகாஷ்க்கு போன் செய்து வாக்குவாதம் செய்த சதிஷ், நேரில் வர பிரகாஷ்க்கு அழைப்பு விடுத்தார்.

அன்று இரவு 8:30 மணிக்கு பிரகாஷ் தனது நண்பர்கள் முருகன், ஏழுமலை, சிபிராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு புத்திராம்பட்டு மாரியம்மன் கோவில் பகுதிக்கு சென்றார். அங்கிருந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன் மகன்கள் நிஜந்தன், 30; விஷ்ணு, 27; குமார் மகன் சதீஷ், 27; சரவணன் மகன் விக்னேஷ், 26 ஆகிய 5 பேரும், பிரகாஷ் மற்றும் நண்பர்களை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயமடைந்த பிரகாஷ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து தாக்குதல் நடத்திய சதீஷை கைது செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement