பள்ளி கல்லுாரி செய்திகள்

சர்வதேச கருத்தரங்கு

மதுரை: பாத்திமா கல்லுாரி பொருளாதாரத்துறை சார்பில் 'மேம்பட்ட அளவு முறைகள் தொழில்நுட்பம் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. துறைத் தலைவர் கிரேஸி ராணி வரவேற்றார்.துணை முதல்வர் அருள்மேரி முன்னிலை வகித்தார். அருளானந்தர் கல்லுாரி பொருளியல் துறைத்தலைவர் ஆண்டனி சிங் தாஸ், ஆஸ்திரேலியா பல்கலை பேராசிரியர் அன்புபழம் தாளமுத்து, கல்லுாரிக் கல்வி முன்னாள் இணை இயக்குநர் ராவணன், அமெரிக்கன் கல்லுாரி இணை பேராசிரியை ஜெயராணி பேசினர். பேராசிரியைகள் செல்வலட்சுமி, அனிதா, பிரவீணா, சுஜிகார்த்திகா பங்கேற்றனர்.

துவக்க விழா

மதுரை: மணியம்மை மழலையர் தொடக்க பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நகர் கிளை துவக்க விழா மாநில தலைவர் உதயசங்கர் தலைமையில் நடந்தது. மாணவி தமிழினி வரவேற்றார். எழுத்தாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். உதயசங்கர், கல்வித் துறையை சேர்ந்த பத்மபாதன், முருகன் பேசினர். கவிஞர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஆசிரியை சுலைகா பானு உள்ளிட்டோர் செய்தனர். சங்க தலைவராக நஜூமுதீன், செயலாளராக சுலைகா பானு, பொருளாளராக கவிஞர் துளிர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் சான்றோன் நன்றி கூறினார்.

Advertisement