மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது வழக்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த நரியந்தல் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரி மறியலில் ஈடுபட்ட 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த நரியந்தல் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் குறிப்பிட்ட தூரம் வரை அமைத்தனர். எஞ்சிய பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் வாய்க்கால் முழுமையாக அமைக்க கோரி, நேற்று முன்தினம் திருக்கோவிலுார் - சங்கராபுரம் சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர். திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

பி.டி.ஓ, செல்வகணேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கால்வாய் அமைத்துக் கொடுப்பதாக உறுதி அளித்ததால் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

இது குறித்து நரியந்தல் வி.ஏ.ஓ., மயிலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பொதுமக்களுக்கும் இடையூறாக மறியலில் ஈடுபட்ட ஆறுமுகம் மகன் கீர்த்தி, 45; பகவான் மகன் தென்னரசு, 30; சடையன் மகன் குப்பன், 40; உள்ளிட்ட 23 பேர் மீது திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement