ஏ.பி.சி., அமைப்பின் தலைவராக கருணேஷ் பஜாஜ் தேர்வு

மும்பை; ஏ.பி.சி., எனப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின், 2025 - 26ம் ஆண்டுக்கான தலைவராக, ஐ.டி.சி., நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி துறையின் நிர்வாக துணைத் தலைவர் கருணேஷ் பஜாஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நம் நாட்டில் உள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்களின், 'சர்குலேஷன்' எனப்படும் வினியோகம் தொடர்பாக தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை, பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்து வருகிறது.

ஒருமனதாக தேர்வு மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்புக்கு, ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 2025 - 26க்கான புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் தலைவராக, ஐ.டி.சி., நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி துறையின் நிர்வாக துணைத் தலைவர் கருணேஷ் பஜாஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகள் ஐ.டி.சி.,யில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், அதன் சந்தை நிலையை வலுப் படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

துணை தலைவராக, 'பென்னட் கோல்மேன் அண்டு கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் மோஹித் ஜெயின் தேர்வு செய்யப் பட்டார்.

அமைப்பின் விளம் பரதார பிரதிநிதிகளாக, கருணேஷ் பஜாஜ் - ஐ.டி.சி., அனிருதா ஹால்டர் - டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி லிமிடெட், பார்த்தோ பானர்ஜி - மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெளியீட்டாளர்களின் பிரதிநிதிகளாக மோஹித் ஜெயின் - பென்னட் கோல்மன் அண்டு கோ, துருபா முகர்ஜி - ஏ.பி.பி., ரியாத் மேத்யூ - மலையாள மனோரமா, கிரிஷ் அகர்வால் - டி.பி., கார்ப்பரேஷன் நிறுவனம், ஷைலேஷ் குப்தா -- ஜாக்ரன் பிரகாசன் லிமிடெட், கரன்தர்தா - லோக்மத் மீடியா பிரைவேட் லிமிடெட், பிரதாப் ஜி.பவார் - - சகல் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், எல்.ஆதிமூலம் - 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் தேர் வு செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பர முகமை பிரதிநிதிகளாக, விக்ரம் சகுஜா - மேடிசன் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீனிவாசன் கே.சுவாமி - ஆர்.கே.சுவாமி பிரைவேட் லிமிடெட், பிரசாந்த் குமார் - குரூப் எம்.மீடியா இந்தியா பிரைவேட் லிமிடெட், வைஷாலி வர்மா - இனிஷியேட்டிவ் மீடியா இந்தியா பிரைவேட் லிமிடெட், சேஜல் ஷா, பப்ளிசிஸ் மீடியா இந்தியா குரூப் தேர்வு செய் யப்பட்டு உள்ளனர்.

Advertisement