கூரை மேல் நுண் காற்றாலை

வீ டுகளுக்கு காற்று மின்னாலை என்பது இப்போதுதான் பரவலாகத் துவங்கியிருக்கிறது. ஜெர்மனியின் 'ஸ்கைவிண்ட்', தனது மைக்ரோ நுண் மின் காற்றாலையான 'என்.ஜி.,'யை, அமெரிக்க இல்லக் கூரைகளில் நிறுவுவதற்கு ஏற்றது என்ற சான்றிதழை, இரண்டாண்டு சோதனைக்குப்பின் பெற்றுள்ளது.
சரியாக 1.5 மீட்டர் அகலமே உள்ள இந்தக் காற்றாலை, ஆண்டுக்கு கிட்டத்தட்ட, 615 கிலோவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது ஒரு சராசரி அமெரிக்கக் குடும்பத்தின் மின் தேவையில் ஆறு சதவீதத்தை நிறைவு செய்கிறது.
தேவைக்கேற்ப பல நுண்காற்றாலைகளை ஒரே வீட்டில் நிறுவும்படி, இதன் வடிவமைப்பு இருக்கிறது. ஒருவர் தன் வீட்டு மின் தேவை முழுதையும் இதிலிருந்தே பெறலாம். ஒரு என்.ஜி., காற்றாலையை மட்டும் நிறுவி கார் பார்க்கிங், முன் வாசல் விளக்குகளுக்கு மட்டும் மின்சாரத்தை பெறலாம்.
இந்த 'என்.ஜி.,' காற்றாலை , சூரிய ஒளி இல்லாத நேரங்களிலும், புயலில் காற்றடிக்கும் போதும் சிறப்பாகச் செயல்படுகிறது.
இது சூரியசக்திக்கும், காற்றாலைக்கும் உள்ள முரண்பாடுகளை இட்டு நிரப்புகிறது. சூரிய ஒளிப் பலகைகள், பகல் வெளிச்சம் இல்லாதபோது செயல்படாது. ஆனால், காற்றாலைகள் இரவிலும், மேகமூட்டமான நாட்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இதனால், சூரிய மின் பலகைகளுடன் இவற்றை சேர்ந்து பயன்படுத்தும்போது, இது முழுமையான ஆற்றல் தீர்வை வழங்குகிறது. ஒரு ஸ்கைவிண்ட் என்.ஜி., காற்றாலையின் விலை தோராயமாக 2.9 லட்சம் ரூபாய்.
மேலும்
-
பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
-
சீனாவுடான எல்லை பிரச்னை நமக்கு மிகப்பெரும் சவால்: முப்படை தளபதி அனில் சவுகான்
-
வெளிநாட்டினர் நாடு கடத்தல்
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
-
திருப்பதி அருகே விண்வெளி நகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
-
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு