பேக்கரியில் தீ விபத்து

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் ஆணைவாரி சாலையில் சொந்தமாக மித்ரன் என்ற பெயரில் பேக்கரி மற்றும் சுவீட்ஸ் ஸ்டால், டீ ஸ்டால் ஆகியவற்றை திறந்தார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் பேக்கரியை மூடி விட்டு சென்றார். நள்ளிரவு 1:00 மணியளவில் திடீரென மர்மமான முறையில் பேக்கரி கடை தீ பிடித்து எரிந்தது. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் கடைகளில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement