கோவையில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோவை: தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, கோவையில் இருந்து 13 ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இவ்விருதுக்கு தேர்வானவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2025-26 கல்வியாண்டில் 386 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதில், 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன், சமூக பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தலா 2 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், கோவையைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களது விவரம்:

* நளினி, தலைமையாசிரியர், ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

* சக்திவேல், இடைநிலை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்

* திருமுருகன், கணிதப் பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூலத்துறை

* சாக்ரடீஸ் குலசேகரன், அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளியங்காடு

* ஆனந்த்குமார், தொழிற்கல்வி ஆசிரியர், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்

* சுமதி, கணிதப் பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்

* அற்புதமேரி, தலைமையாசிரியர், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ராமசாமிநகர்

* சகிலா, தலைமையாசிரியர், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி

* கோமதி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நெகமம்

* ஆரோக்கியா தடாயுஸ், கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

* விவேகானந்தன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், தம்பு மேல்நிலைப்பள்ளி, பிரஸ் காலனி

* மதியழகன், பொறுப்பு தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெட்டத்தாபுரம்

* அமுதா, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, முடுக்கன்துறை

Advertisement