அடிப்படை வசதி நிறைவேற்றக்கோரி முற்றுகை: இந்திய கம்யூ., முடிவு

புவனகிரி: லால்புரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் 10ம் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது.

மாவட்ட துணைச் செயலாளர் சேகர் அறிக்கை:

லால்புரம் ஊராட்சி டி.என்.சி.எஸ்.சி., சாலையில் வடிகாலுக்காக 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிக்காததை கண்டித்தும், அதேபகுதியில் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். பெரிய தெரு மற்றும் முருகள் கோவில் தெருவில் 32 லட்சம் ரூபாய் செலவில் அயோத்திதாச பண்டிதர் நிதியில் தார்சாலை அமைக்க அறிவித்த நிலையில், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவற்றை விரைந்து நிறைவேற்றிட கோரியும், பாலுத்தங்கரையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தை வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம் கோரிக்கைககளை வலியுத்தி பேசுகிறார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement