பிளஸ் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கரூர்: 'பிளஸ் 2 தேர்வு நடைமுறையில், மாற்றம் செய்ய வேண்டும்' என, முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர், பள்ளி கல்வித்துறை இயக்குநரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், 6 முதல், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வரை மாணவர்களிடம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறு வேறு தொகை வினாத்தாள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில், பல மாவட்டங்களில் முறைகேடு நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மாணவர்களுக்கு அனைத்து வினாத்தாள்களும் இலவசமாக வழங்க வேண்டும்.

பள்ளிகளில் நடத்தப்படும் செய்முறை தேர்வுகளுக்கான, ரிக்கார்டு நோட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும். ஆண்டுதோறும் பிளஸ் 2 பொது தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

இதில், 200 மற்றும், 150 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத, 3 மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, பிளஸ் 2 தேர்வு, 70 மற்றும், 90 மதிப்பெண்களுக்கு மட்டும் தான் நடக்கிறது.

இதனால், மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு, அறையில் வீணாக அமர்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அவர்களின் கால விரயத்தை தடுக்கும் வகையில், இரண்டரை மணி நேரமாக தேர்வு காலத்தை குறைக்க வேண்டும். இதனால், தேர்வறையில் எழும் தேவையற்ற பிரச்னைகள் குறையும்.

மதிப்பெண் அளவு குறைந்துள்ளதால், விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். தேர்வறைகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement