குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மந்தாரக்குப்பம்,: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரி, துணை சேர்மன் பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தினகரன் பேசினர்.

கூட்டத்தில், குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, பள்ளி இடைநின்றலை தடுத்தல், குழந்தை கடத்தலை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல். குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல், 'குட் டச்; பேட் டச்' உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement