பள்ளிகளில் உளவியல் ஆலோசனை பெற்றோர்கள் கோரிக்கை

ப ள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளது.

இதனால், அவர்கள் பள்ளிக்குள்ளேயே மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொள்வது மட்டுமின்றி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அவர்களது எதிர்காலம் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை திட்டத்தை செயல்படுத்தி, அதற்கு என தனியாக உளவியல் ஆலோசகரை நியமித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உளவியல் ஆலோசகர் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலாசனை மையம் அமைத்து வளர் இளம் பருவத்தினர் உள்ள மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது தவிர்ப்பது,பல்வேறு சூழ்நிலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புகள், கற்றலில் கவனத்துடன் இருப்பது என மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் முறையாக இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. எனவே இத்திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement