இரவில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டி செல்ல அறிவுரை
தொண்டி: வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டி செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
வேளாணங்கண்ணி மாதா கோயில் திருவிழா ஆக.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணி நோக்கி செல்கின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேரந்தவர்கள் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், தொண்டி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக செல்கின்றனர்.
பகலில் வெயில் கடுமையாக இருப்பதால் ஆங்காங்கே தங்கி இளைப்பாறிவிட்டு இரவில் நடைபயணமாக செல்கின்றனர். மின் விளக்குகள் இல்லாத பகுதியில் நடந்து செல்லும் போது வாகன விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க அவர்களின் சட்டை அல்லது பைகளில் இரவில் ஒளிரும் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டாமல் செல்கின்றனர்.
கடந்த மாதம் ராமநாத புரத்தில் இருந்து திருவெற்றியூரை நோக்கி இரவில் பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் மீது உப்பூர் அருகே மீன் லாரி மோதியதில் இரு பெண்கள் பலியாயினர்.
எனவே வேளாங் கண்ணி செல்லும் பக்தர்கள் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்களை ஒட்டி பாதுகாப்புடன் நடந்து செல்ல போலீசார் அறிவுரை வழங்கினர்.
மேலும்
-
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
-
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
-
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
-
பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்
-
160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
-
அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!