கள்ளப்படகில் தமிழகத்திற்கு வந்த இலங்கை போலீஸ்காரர் வழக்கு செப்.8க்கு ஒத்திவைப்பு
ராமநாதபுரம்: போதைப்பொருட்களை திருடிய வழக்கில் தலைமறைவாகி கள்ளப் படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா 32, மீதான வழக்கு விசாரணையை செப்., 8க்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றம் ஒத்தி வைத்தது.
இலங்கையில் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதில் அனுரகுமார என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், இலங்கை துறைமுக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ் காரர் பிரதீப் குமார் பண்டாராவின் அண்ணன் ஆவார். இவர் ஸ்டேஷனில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருட்களை திருடி தன் சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.
இதனால் அவரை அந்நாட்டு போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதையறிந்த பிரதீப் குமார் பண்டாரா கள்ளப்படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு தப்பி வந்தார். அவரை மண்டபம் கடலோர போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். தற்போது இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
சிறையில் இருந்த பிரதீப்குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இவ்வழக்கு ராமநாத புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி (பொ) கவிதா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதீப்குமார் பண்டாரா ஆஜராகவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையை செப்.,8க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலும்
-
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
-
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
-
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
-
பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்
-
160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
-
அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!