ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகள் இருக்கு ஆனா இல்ல: அடிக்கடி பழுதாகி விடுவதால் இரவில் விபத்து அபாயம்

ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நகர், புறநகர் பகுதியில் ரூ.30 கோடியில் இருவழிச்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளன.
இதில் ராமநாதபுரம் நகர், பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கர கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் 7 கி.மீ.,க்கு ரோட்டின் நடுவே ரூ.1 கோடியே 80 லட்சத்தில் சென்டர் மீடியன் அமைத்து மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில், ராமேஸ்வரம் ரோடு, பட்டணம்காத்தான் ரோடு, பாரதிநகர் ஆகிய இடங்களில் மின் விளக்குகள் சரிவர பரா மரிக்கப்படாமல் அடிக்கடி பழுதாகிவிடுவது வாடிக்கையாகியுள்ளது.
சில இடங்களில் முழுமையாக எரியா மலும், சில இடங்களில் ஒருபக்கம் மட்டும் விட்டு விட்டு பல்புகள் எரிகிறது. இதனால் இரவில் நடுரோட்டில் குறுக்கே வரும் கால்நடைகள், நாய்கள் வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி பலியாகின்றன. வாகன ஓட்டிகளும் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே போக்குவரத்து மிகுந்த மதுரை, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பழுதாகியுள்ள மின் விளக்குகளை மாற்றுவதற்கும், தொடர்ந்து பராமரிக்க நகராட்சி, ஊராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.
மேலும்
-
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
-
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
-
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
-
பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்
-
160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
-
அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!