ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் என்ற பெயரில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் பயணிகள் அதிருப்தி
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம்- மதுரை சிறப்பு ரயில் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.
ராமேஸ்வரம் முதல் மதுரை வரை பழைய தண்டவாளத்தை அகற்றி புதிய தண்டவாளங்கள் பொருத்தி பராமரிப்பு பணி கடந்த ஜூலை முதல் நடக்கிறது.
இதற்காக ராமேஸ் வரத்தில் இருந்து காலை 11:40 மணிக்கு மதுரை செல்லும் பயணிகள் ரயிலை ரத்து செய்து மதியம் 2:40 மணிக்கு சிறப்பு ரயிலாக இயக்குகின்றனர். தற்போது செப்., 8 முதல் 30 வரை வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிறப்பு ரயிலாக இயக்க உள்ளனர்.
வழக்கம் போல் காலை 11:40க்கு புறப்படும் ரயிலில் ஒரு நபருக்கு ரூ.40 கட்டணம் ஆகும். இந்த ரயில் 3:30 மணி பயண நேரத்தில் மதுரை சென்றடையும். ஆனால் சிறப்பு ரயிலுக்கு ரூ.85 கட்டணம் வசூலித்து அதே 3:30 மணி பயண நேரத்தில் மதுரை செல்கிறது.
வழக்கமாக இயங்கும் ரயிலை ரத்து செய்த ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயில் என்ற பெயரில் கூடுதல் கட் டணத்தை வசூலித்து அதே பயண நேரத்தில் மதுரை செல்வதால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை.
இதனால் பயணி களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் ரயில்வே நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைகின்றனர். எனவே சிறப்பு ரயிலுக்கு வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்து வழக்கமான ரூ.40ஐ வசூலிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் ஆர் வலர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
-
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
-
ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
-
பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்
-
160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு: விமானி விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு
-
அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!