வருவாய்த்துறை அலுவலர்  வேலைநிறுத்தம் வெறிச்சோடிய அலுவலகத்தால் மக்கள் ஏமாற்றம்

ராமநாதபுரம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வழக்கமான அன்றாடப் பணிகள் பாதிக்கப் பட்டது. பட்டா மாறுதல், நிலஅளவை, உதவித்தொகை, கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் பழனிக்குமார் கூறுகையில், பல ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் நடத்த வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேரம் (செப்.,3,4) வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், ராமநாதபுரம், கமுதி, திருவாடானை உள்ளிட்ட அனைத்து தாலுகா அலு வலகங்களிலும் அலு வலக உதவியாளர் முதல் தாசில்தார்கள் என 530 வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங் கேற்றுள்ளனர் என்றார்.

Advertisement