வெளிநாட்டினர் நாடு கடத்தல்

புதுடில்லி: சட்டவிரோதமாக தங்கியிருந்த, 13 நைஜீரியர்கள் மற்றும் இரண்டு வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: தென்மேற்கு டில்லி துவாரகாவில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 13 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் என 15 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, 15 பேரும் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டனர். சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், 15 பேரும் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement