ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை

ஹாங்சோவ்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 11-0 என, தாய்லாந்தை வீழ்த்தியது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா, 'பி' பிரிவில் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
'பி' லீக் போட்டியில், உலகின் 'நம்பர்-9' இந்தியா, தாய்லாந்து (30வது இடம்) அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். இந்திய அணிக்கு கிடைத்த 9 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில், 5 கோல் பதிவானது. தாய்லாந்து அணிக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் பாதி முடிவில் 5-0 என முன்னிலையில் இருந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு உதிதா (30, 52வது நிமிடம்), பியூட்டி டங் டங் (45, 54வது) தலா 2 கோல் அடித்தனர். மற்ற இந்திய வீராங்கனைகளான மும்தாஜ் கான் (7வது நிமிடம்), சங்கீதா குமாரி (10வது), நவ்னீத் கவுர் (16வது), லால்ரெம்சியாமி (18வது), சுமன் தேவி (49வது), ஷர்மிளா தேவி (57வது), ருதுஜா (60வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான் அணி 9-0 என, சிங்கப்பூரை வீழ்த்தியது. இன்று நடக்கும் 'பி' பிரிவு போட்டிகளில் இந்தியா - ஜப்பான், சிங்கப்பூர் - தாய்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
மேலும்
-
நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
-
வர்த்தக வாகன விற்பனை 6.53 சதவீதம் உயர்வு
-
350 சி.சி.,க்கு அதிகமான பைக் விலை செப்., 22க்கு பின் ரூ.24,000 வரை உயரும்
-
குஜராத் விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த சரக்கு முனையம்
-
மதுபாட்டில் விற்றவர் கைது..
-
நிலங்களில் மின் ஒயர் திருட்டு விவசாயிகள் அச்சம்