டிரம்ஸ் இசையில் சாதிக்கத் துடிக்கும் ராகுல்

கோ வை, வடவள்ளி லட்சுமி நகரில் வசிப்பவர் ராகுல். ஒன்பதாம் வகுப்பு மாணவர். டிரம்ஸ் இசை மீது அதிக விருப்பம் கொண்ட இவர், ஐந்து வயதில் இருந்து டிரம்ஸ் இசையை கற்று வருகிறார். டிரம்ஸ் இசை மட்டுமின்றி கீபோர்டு, கிட்டார், தபேலா, மிருதங்கம், தவில் என, பல இசைக்கருவிகளை முறையாக வாசிக்க பயிற்சி பெற்று இருக்கிறார்.
சிறு வயதிலேயே டிரம்ஸ் வாசிப்பதில், சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பிய ராகுல், லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லுாரியில் சேர்ந்து தீவிர பயிற்சி எடுத்து வந்தார். டிரினிட்டி கல்லுாரி நடத்திய, 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 8வது கிரேடு டிரம்ஸ் தேர்வில் ராக் மற்றும் பாப் இசையில் தகுதி பெற்ற இவர், கிளாசிக்கல் அண்டு ஜாஸில் இசையிலும் தனித்துவமான இசை சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை யாரும், 13 வயதில் இச்சாதனையை செய்யவில்லை. டிரம்ஸ் இசையில் முதல் முறையாக ராகுல் இச்சாதனையை படைத்திருக்கிறார். 'கலாம்' உலக சாதனை அமைப்பு, ராகுலின் இசை சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
ராகுலிடம் பேசியபோது, ''நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது டிரம்ஸ் கற்றுகொள்ள ஆரம்பித்தேன். ராக் அண்டு பாப் இசை பயின்றேன். டிரம்ஸ் இசையில் கிளாஸிக் முக்கியம் என்பதால், சங்கமம் ஸ்கூல் ஆப் மியூசிக் இளங்கோ மாஸ்டரிடம் கிளாஸிக் கற்றுக்கொண்டேன். இது துவக்கம்தான்; என் இசை சாதனை தொடரும்.'' என்றார்.
மேலும்
-
குறளிசை காவியம் வெளியிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
-
ஐ.டி., அணி நிர்வாகி ஆதரவு
-
பிரிப்பதை மறந்து விடுங்கள் இணைப்பதை நினையுங்கள் லண்டன் தமிழர்களுக்கு முதல்வர் அறிவுரை
-
கள்ளக்காதல் விவகாரம் இரு பெண்களை குத்திவிட்டு தப்பிய வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை இரு பெண்களை குத்திவிட்டு தப்பிய வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை
-
கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்
-
வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை