'சைலண்ட் மோடில்' த.வெ.க., : விரக்தியில் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய், கட்சி துவங்கி இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து, தமிழக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த ஆயத்தமாகி வருகிறார். இதற்காக, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து கட்சி பணியை தீவரப்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தொண்டர்களை உற்சாகப்படுத்திட தனது தேர்தல் பிரசார பயணத்தை வரும் 13ம் தேதி திருச்சியில் இருந்து துவங்கவுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலமான புதுச்சேரியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் கட்சி உள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்தின் சொந்த ஊரான புதுச்சேரியில் கட்சி 'சைலண்ட் மோடில்' இருப்பது விஜய் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
மேலும் புஸ்சி ஆனந்த் எம்.எல்.ஏ.,வாக முன்பு வெற்றி பெற்ற உப்பளம் தொகுதியில், வரும் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வந்த சிவா, கட்சியை விட்டு ஒதுங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து செல்லும் ஆனந்த், அவ்வப்போது முதல்வர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். அதே நேரத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்கிறார். இதனால், புதுச்சேரியில் கட்சியின் நிலைப்பாடுதான் என்னவென்றே தெரியாமல் புலம்பிக் கொண்டுள்ளனர்.
இதனால் த.வெ.க.வில் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஆசையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கட்சியின் தற்போது நிலையை கண்டு தங்களின் முடிவை மாற்றிக் கொண்டு மாற்றுக் கட்சிகளை நாடி சென்று விட்டனர். புதுச்சேரியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று நினைத்திருந்த பிரபல கட்சிகள் தற்போதைய நிலையில் த.வெ.க. புதுச்சேரியில் சத்தமின்றி சோர்ந்து கிடப்பதால் சந்தோஷத்தில் உள்ளனர்.
சோர்ந்து கிடக்கும் த.வெ.க.வை வரும் தேர்தலுக்குள் எப்படி தட்டி எழுப்ப போகிறார் என்ற கேள்விக்கான பதில் புஸ்சி ஆனந்திடமே உள்ளது.
மேலும்
-
மதுரை ரயிலில் கடத்தல் கஞ்சா, குட்கா பறிமுதல்
-
ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு; தொழிலாளி கொலை
-
திருநெல்வேலி பாலத்தில் அரசு பஸ் டூவீலர் மோதல்: பலி 3
-
ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்
-
மேலப்பாளையத்தில் போலி பத்திரப்பதிவு சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
-
நடராஜருக்கு ஆவணி சதுர்த்தி மகா அபிஷேகம்