ஊரக வளர்ச்சித்துறையினர் மூன்று கட்ட போராட்டம்
நிலக்கோட்டை: -தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிலக்கோட்டையில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ், ஊராட்சிச் செயலாளர்கள் சங்க மாநில இணைச்செயலாளர் விஜயகர்ண பாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டியராஜன் கூட்டாக தெரிவித்ததாவது:
தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இணைத்து பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை ரூ.10,000 ஆக உயர்த்தி ஊராட்சிகள் மூலம் வழங்கிட வேண்டும்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு கோர்ட் உத்தரவின்படி சலுகைகள் வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுபோன்ற 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் திருச்சியில் மாநில அளவிலான மாநாடு நடந்தது.
அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி செப்., 24ல் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், நவ., 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடக்கவுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பு பணி நடைபெற்று வருகிறது என்றனர்.
மேலும்
-
ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி: பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகும் அரசியல் தலைவர்கள்
-
ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை: இனி எச்சரிக்கை கிடையாது என்கிறார் டிரம்ப்
-
பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி
-
பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
-
4 மாவட்டங்களில் இன்று கன மழை
-
வர்த்தக யுத்தத்தில் இறங்கும் சுதேசி நிறுவனங்கள்