நடராஜருக்கு ஆவணி சதுர்த்தி மகா அபிஷேகம்

திருக்கோவிலுார்: கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு ஆவணி சதுர்த்தி மகா அபிஷேகம் நடந்தது.

ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு தினங்கள் மகா அபிஷேகம் நடைபெறும். அதில் ஒன்று ஆவணி சதுர்த்தி மகா அபிஷேகம்.

திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் சபையில் நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Advertisement