சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கம், நயினார்பாளையம் லயன் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.
தாகம்தீர்த்தாபுரம் வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை முத்தமிழ் சங்கத் தலைவர் தொல்காப்பியன், கால்நடை டாக்டர் ரத்தினவேலு, சின்னசேலம் தமிழ் சங்க செயலாளர் அம்பேத்கர், நயினார்பாளையம் லயன் சங்க தலைவர் முத்தையன் முன்னிலை வகித்தனர்.
சின்னசேலம் தமிழ்ச் சங்க ஆலோசகர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சின்னசேலம் தமிழ் சங்கத்தலைவர் கவிதைத்தம்பி வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை ஆசிரியர் முருகன் திறந்து வைத்தார்.
உளுந்துார்பேட்டை சாரதா ஆஸ்ரம அருட்சகோதரி யதீஸ்வரி சச்சிதானந்த ப்ரியா அம்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் இதயம் கிருஷ்ணா தலைமையில் எழுத்தறிவித்தவன் இறைவன் எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடந்தது.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக பட்ட ஆய்வாளர் வாசுதேவன் ஆசிரியர்களை போற்றுவோம் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
சங்க பொறுப்பாளர்கள் வெற்றிவேல், கண்ணன், அசோகன், ஆறுமுகம், கருணாநிதி, ராஜா, மதலேனாள் கபிரியேல் நடராஜன், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணாமலை நன்றி கூறினார்.
மேலும்
-
ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி: பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகும் அரசியல் தலைவர்கள்
-
ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை: இனி எச்சரிக்கை கிடையாது என்கிறார் டிரம்ப்
-
பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி
-
பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
-
4 மாவட்டங்களில் இன்று கன மழை
-
வர்த்தக யுத்தத்தில் இறங்கும் சுதேசி நிறுவனங்கள்