கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் ரோட்டரி சங்க நுாற்றாண்டு மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிர காஷ் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) செந்தில்குமார், துணை ஆளுநர் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் முருகன் வரவேற்றார். முகாமிற்கு நிதியுதவி வழங்கிய சரண்ராஜ், பேபி சுஜிதா தம்பதிக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் உப்பாளி, முகாமில் பங்கேற்ற 310 பேருக்கு கண் பரிசோதனை செய்தார். அதில் 91 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முகாமிற்கான பணிகளை ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, சுப்பரமணியன், முத்துராமலிங்கம் ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும்
-
ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி: பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகும் அரசியல் தலைவர்கள்
-
ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை: இனி எச்சரிக்கை கிடையாது என்கிறார் டிரம்ப்
-
பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி
-
பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
-
4 மாவட்டங்களில் இன்று கன மழை
-
வர்த்தக யுத்தத்தில் இறங்கும் சுதேசி நிறுவனங்கள்