மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது

ஆனேக்கல்: மனைவி பிரிந்து சென்றதால், மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லை சேர்ந்தவர் ருக்மணி, 55. இவரது மகள் நந்தினி, 32. இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வேணுகோபால், 34, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு நந்தினி சென்றுவிட்டார்.
மனைவி தன்னை பிரிந்து சென்றதற்கு, அவரது தாய் ருக்மணி தான் காரணமென வேணுகோபால் நினைத்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ருக்மணி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற வேணுகோபால், அரிவாளால் முதுகில் வெட்டிவிட்டு தப்பினார். பலத்த வெட்டு காயம் அடைந்த ருக்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நந்தினி அளித்த புகாரில் வேணுகோபால் கைது செய்யப்பட்டார்.
மேலும்
-
யார் அந்த 14 எம்.பி.,க்கள்; சி.பி.ஆர்., பெற்ற கூடுதல் ஓட்டுகளால் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
-
ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது
-
சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!
-
விஜய்க்கு அனுமதி மறுப்பா? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்கிறார் திருமா
-
நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி
-
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்; நன்றி சொன்னார் கிரண் ரிஜிஜூ!