முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடையை அமைச்சர் ஆய்வு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் வரும், 12ல் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.


இந்நிலையில் நேற்று விழா மேடை, முன்னேற்பாடு பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement