தமிழகம் பீஹார் அல்ல: சொல்கிறார் துரைமுருகன்

சென்னை: '' தமிழகம் பீஹார் அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
அவர் அளித்த பேட்டி: திமுக கூட்டணி சிதறும் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் போகிற போக்கில் பேசுகிறார். பாவம். ஏதாவது பேச வேண்டும் என்று தான். இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர். எங்களுக்கு ஆதரவாகவா பேசுவார்.
விஜய் கட்சி நிகழ்ச்சிக்கு திமுக தடை என சொல்லும் தவெகவின் ஆனந்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனது அரசியல் சர்வீஸ் வேறு. அவர்களது அரசியல் சர்வீஸ் வேறு.
தமிழகத்துக்கு எப்படியாவது கெட்ட பெயர் வேண்டும் என பிரதமர் நினைத்தால் அது நல்லது அல்ல. அப்படி நினைப்பாரா என சந்தேகம் உள்ளது. ஆனால் நிலைமை அப்படி தான் உள்ளது
அன்புமணி நீக்கப்பட்டது, அவர்கள் வீட்டுக்குள் நடக்கும் சமாச்சாரம் நமக்கு எதுக்கு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், ' தமிழகம் பீஹார் அல்ல. தமிழகம் என்பது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அங்குள்ளது போல், இங்கு நிர்வாகம் இல்லை. இங்கு ஸ்டாலின் தலைமை உள்ளது. இதுபோன்ற தந்திரங்கள் தமிழகத்திலோ அல்லது தலைவரிடம் வேலை செய்யாது,' என்றார்.










மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'