கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு


கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல், அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 7ல், 638 கன அடியாக இருந்த நீர்வரத்து, 8ல், 845 கனஅடியாக அதிகரித்த நிலையில் நேற்று, 711 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அணையிலிருந்து நேற்று முன்தினம், 722 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று, 895 கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் கடந்த, 3 நாட்களாக, 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் மழையளவு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி போச்சம்பள்ளியில், 31.40 மி.மீ., ஊத்தங்கரையில், 9.40, என மொத்தம், 40.80 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கே.ஆர்.பி., அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், நெடுங்கல் தடுப்பணையில் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது. அதில் ஏராளமான இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement