நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறப்பு

விசாகப்பட்டினம்: நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் ரூ.7 கோடியில் கட்டப்பட்டது, 55 மீட்டர் அளவு கொண்டது. இது கேரளாவின் வாகமோன் கண்ணாடி பாலத்தின் 38 மீட்டர் என்ற சாதனையை முறியடிக்கிறது. 40 மிமீ தடிமன் கொண்ட டெம்பர்டு லேமினேட் செய்யப்பட்ட ஜெர்மன் கண்ணாடி பேனல்களின் மூன்று அடுக்குகள் கொண்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி பேனல், 100க்கும் மேற்பட்ட மக்களைத் தாங்கும் மற்றும் ஒரு சதுர மீட்டருக்கு 500 கிலோ எடையுள்ள சுமைகளைத் தாங்கும். ஆனால், பாதுகாப்பு கருதி, கூட்டத்திற்கு ஏற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக, பார்வையாளர்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவாக அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அமைப்பு மணிக்கு 250 கிமீ வேகத்தில் வீசும் காற்று மற்றும் சூறாவளியை தாங்கும். புயல்களை அடிக்கடி சந்திக்கும் கடலோர நகரத்தில் இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.
ஆந்திராவில் திறக்கப்பட உள்ள இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம், விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.







மேலும்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'
-
சித்தாபுதுார் குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு