துளிகள்

பொதுத்துறை நிறுவனங்களுக்கு செபி விதிகளில் தளர்வு



அ ரசின் வசம் 90 சதவீதம் அல்லது அதற்கு மேலான பங்குகள் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், பங்குச் சந்தையிலிருந்து தாமாக விலகிக்கொள்ளும் நடைமுறையை செபி எளிதாக்கிஉள்ளது.

இதன்படி, விலகுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பொதுப்பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

பங்கு விலை நிர்ணயம் தொடர்பான கணக்கீடுகளிலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.



கோட்டக் பங்குகளை விற்கும் எஸ்.எம்.பி.சி.,



ஜ ப்பானைச் சேர்ந்த எஸ்.எம்.பி.சி., வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கியில் தனக்குள்ள 1.65 சதவீத பங்குகளை 6,166 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கு ஒன்றின் விலை 1,880 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்ய எஸ்.எம்.பி.சி., திட்டமிட்டுள்ளது.

இது கோட்டக் வங்கியின் தற்போதைய பங்கு விலையைக் காட்டிலும் நான்கு சதவீதம் குறைவாகும். இதை பிளாக் டீல் பரிவர்த்தனை, அதாவது நிறுவன முதலீட்டாளர்களின் அதிக அளவிலான பரிவர்த்தனையாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகையை யெஸ் பேங்க் வங்கியின் 24.99 சதவீத பங்குகளை வாங்க எஸ்.எம்.பி.சி., பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement