துப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி கைது
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பழமலைநாதர் நகரில் திருமண மண்டப காவலாளி கார்த்திக், 45, என்பவரை, நேற்று முன்தினம் அதிகாலை, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் கந்தவேலு, விக்னேஷ், பாலாஜி ஆகியோர் போதையில் ஆயுதங்களால் தாக்கி, ரீல்ஸ் எடுத்தனர்.
தொடர்ந்து, பெட்டிக்கடைக்காரர்கள் ராஜேந்திரன், 58, சுந்தரமூர்த்தி, 60 மற்றும் அரசு பஸ் டிரைவர் கணேசன், 59, ஆகியோரையும் தாக்கி தப்பினர். முந்திரிதோப்பில் பதுங்கியிருந்தவர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கந்தவேலுக்கு காலில் குண்டு பாய்ந்தது. விக்னேஷ் தவறி விழுந்ததில் மாவுக்கட்டு போடப்பட்டது. அப்போது தப்பிய பாலாஜி நேற்று பிடிபட்டார்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை விழுப்புரம் தடய வியல்துறை உதவி இயக்குனர் சுரேஷ், கடலுார் கைரேகை பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ராஜாராமன் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும்
-
பிரான்ஸ் - இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!
-
வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி
-
திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
-
கோவையில் சந்தேகத்துக்கு உரிய 7,000 பேரின் கைரேகை சேகரிப்பு
-
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்; மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
-
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஹிந்து முன்னணி வாழ்த்து