வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி

13

புதுடில்லி: சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் முன்பு, 1893ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது; அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை ஒரு திருப்புமுனை தருணமாக கருதப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலக அரங்கில் இந்திய கலாசாரம் பற்றி அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இது உண்மையிலேயே நமது வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement