அறிவிப்போடு நின்று போன கப்பல் பயண சுற்றுலா திட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம் வரையிலான கப்பல் பயண சுற்றுலாத் திட்டம் அறிவிப்புடன் ஓராண்டாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் வழியாக 68 கி.மீ.,ல் தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரக கோயில் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன.

மேலும் இப்பகுதிக்குள் பல்வேறு சிறிய தீவுகளும், நீண்ட கடற்கரையும் உள்ளன.

இவ்விடங்களுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம், நாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதையடுத்து சிறிய ரக கப்பல் சேவைகளை துவங்க தமிழக அரசு முடிவு செய்து ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை இணைக்கும் வகையில் கப்பல் சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் 3 மணி நேரத்திற்கு 50 பயணிகளை கொண்டு இயக்கும் வகையில் செயல்பட உள்ளன.

இதற்காக சுற்றுலாக்கப்பல்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனதமிழக கடல்சார் வாரியம் மூலம் 2024ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் பிறகு இத்திட்டம் ஆரம்ப கட்டநடவடிக்கையுடன் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு பயனுள்ள இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுமுன்வர வேண்டும்.

Advertisement