கவுன்டி அணியில் வாஷிங்டன்

லண்டன்: இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் கவுன்டி அணியில், இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார்.
இங்கிலாந்தில், கவுன்டி சாம்பியன்ஷிப் 125வது சீசன் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள ஹாம்ப்ஷயர் அணி, தனது கடைசி இரண்டு போட்டியில் சாமர்செட் (செப். 15-18), சர்ரே (செப். 24-27) அணிகளை சந்திக்கிறது. இதற்கான ஹாம்ப்ஷயர் அணியில், இந்திய 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய வாஷிங்டன், 284 ரன் (சராசரி 47.33, 'ஸ்டிரைக் ரேட் 48.38), 7 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் வாஷிங்டன், 2வது முறையாக கவுன்டி அணிக்காக விளையாடுகிறார். இதற்கு முன், 2022ல் லங்காஷயர் அணிக்காக கவுன்டி சாம்பியன்ஷிப், ஒருநாள் கோப்பையில் பங்கேற்றார். தவிர இவர், இந்த ஆண்டு ஹாம்ப்ஷயர் அணியில் இணைந்த 2வது இந்திய வீரரானார். ஏற்கனவே திலக் வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
வாஷிங்டன், இதுவரை 13 டெஸ்ட் (32 விக்கெட், 752 ரன்), 40 முதல் தர (91 விக்கெட், 1885 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மேலும்
-
துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண் சிக்கினார்
-
மொரீஷியஸின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு... ரூ.6,000 கோடி!: சிறப்பு பொருளாதார தொகுப்பாக அறிவித்தார் மோடி
-
புதிதாக 14 ஷாப்பிங் மால்கள் துவக்க போரம் மால்ஸ் திட்டம்
-
சின்னசேக்காடு அரசு பள்ளி அணிகள் மாவட்ட ஹாக்கி போட்டிக்கு தேர்வு
-
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை இடம் மாற்றம்