சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'
சாம்ராஜ்நகர் : முகநுால் மூலம் அறிமுகமான சிறுமியை, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரை சேர்ந்தவர் நாகேந்திரா, 28. இவருக்கு இரண்டு ஆண்டுக்கு முன், முகநுால் மூலம் 16 வயது சிறுமி அறிமுகமானார். இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர். சிறுமியை காதலிப்பதாக நாகேந்திரா நம்ப வைத்தார்.
பேச வேண்டும் என கூறி, சிறுமியை வரவழைத்து கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, ஹனுார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. நாகேந்திராவை கைது செய்த போலீசார், ஹனுாரின், கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில், நாகேந்திராவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன் தினம் நீதிபதி கிருஷ்ணா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, சட்டசேவைகள் ஆணையத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண் சிக்கினார்
-
மொரீஷியஸின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு... ரூ.6,000 கோடி!: சிறப்பு பொருளாதார தொகுப்பாக அறிவித்தார் மோடி
-
புதிதாக 14 ஷாப்பிங் மால்கள் துவக்க போரம் மால்ஸ் திட்டம்
-
சின்னசேக்காடு அரசு பள்ளி அணிகள் மாவட்ட ஹாக்கி போட்டிக்கு தேர்வு
-
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை இடம் மாற்றம்