வனத்துறையினரை கூண்டில் தள்ளிய 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
சாம்ராஜ் நகர் : புலியை பிடிக்க தாமதமாக வந்த வனத்துறை ஊழியர்களை கூண்டில் சிறை வைத்த ஐந்து விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் பொம்மலாபூர் கிராமத்தில் புலியை பார்த்த கிராமத்தினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வர தாமதமானதால், புலி சென்றுவிட்டது. இதனால் கோபமடைந்த கிராமத்தினர், பத்து வனத்துறை ஊழியர்களை, புலியை பிடிக்கும் கூண்டில் தள்ளி பூட்டினர்.
தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினரை சமாதானப்படுத்தினர். வனத்துறை ஊழியர்களை கூண்டில் அடைத்த கிராமத்தை சேர்ந்த ரகு, பிரசாத், தீபு, கங்காதர் சுவாமி, ரேவண்ணா ஆகியோர் மீது வனத்துறை துணை அதிகாரி ஞானசேகர், குண்டுலுபேட் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கு விவசாயிகள் சங்கத்தினர் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'புலியை பிடிக்க கூண்டில் கன்று குட்டியை கட்டிய வனத்துறையினர், அதற்கு தண்ணீர், தீவனம் வழங்காமல் கன்று சாவதற்கு காரணமாகினர். அதுபோன்று புலியை பிடிக்க தாமதமாக வந்த கோபத்தில் கூண்டில் தள்ளி பூட்டினர்.
'வனத்துறையினரை யாரும் அடிக்கவில்லை, மிரட்டவில்லை. பொய் வழக்கு பதிவு செய்து, எங்களை கட்டுப்படுத்த நினைத்தால், சும்மா இருக்க மாட்டோம். எங்கள் மீது புகார் கொடுத்தவுடன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் ஆடுகள், மாடுகள் இறந்தால் வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்வீர்களா' என்றனர்.
மேலும்
-
துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்தது ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண் சிக்கினார்
-
மொரீஷியஸின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு... ரூ.6,000 கோடி!: சிறப்பு பொருளாதார தொகுப்பாக அறிவித்தார் மோடி
-
புதிதாக 14 ஷாப்பிங் மால்கள் துவக்க போரம் மால்ஸ் திட்டம்
-
சின்னசேக்காடு அரசு பள்ளி அணிகள் மாவட்ட ஹாக்கி போட்டிக்கு தேர்வு
-
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை இடம் மாற்றம்