மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலக அளவில் முருக பக்தர்களை ஈர்க்கும் வகையில், மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முருகன் சிலை அமைய உள்ள இடத்தை சுற்றியுள்ள, 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அவ்விடங்களை கையகப்படுத்துவது தொடர்பாக, கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இடம் கையகப்படுத்துவது தொடர்பாக, மற்ற துறைகளுக்கு கடிதம் அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவில் துணை கமிஷனர் செந்தில் குமார், தக்கார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

Advertisement