108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு முடிவு
மதுரை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.
தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை வேலுார் மாவட்டம் அணைக்கட்டு, திருச்சி மாவட்டம் துறையூரில் மேற்கொண்டார். அவ்வழியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதிலிருந்த ஊழியர்களை அ.தி.மு.க.,வினர் சிலர் தாக்கினர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
செப்., 12 விசாரணையின்போது,'ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் தடையின்றி சுமூகமாக கடந்து செல்வதை உறுதி செய்ய எஸ்.பி., போலீஸ் கமிஷனர்களுக்கு வழிகாட்டுதல் சுற்றறிக்கையை டி.ஜி.பி., வெளியிட்டுள்ளார்,' எனக்கூறி அரசு தரப்பில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் ஆஜரானார்.
நீதிபதிகள் டி.ஜி.பி.,யின் வழிகாட்டுதல்களை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும்
-
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
-
கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
-
ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்த இஸ்ரேல் பிரதமர்; கைது அச்சம் காரணம்!
-
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
கோவையில் சரக்கு வாகனம் மோதி பைக்கில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் பலி
-
சென்னையில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் தாமதம்; பயணிகள் 4 மணி நேரம் காத்திருப்பு