திரவுபதியம்மன் கோவிலில் தேர் திருவிழா

கச்சிராயபாளையம் : எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, ஊரணி பொங்கல், தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் தீமிதி உற்சவமும், நேற்று தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Advertisement