அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; விவேக் ராமசாமி காட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் பிரமுகர் விவேக் ராமசாமி கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். சந்திர மௌலி நகமல்லையா கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் டாலஸ்ஸில் உள்ள “டவுன்டவுன் சூட்ஸ்” என்ற ஹோட்டலில் மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரை கொடூரமான முறையில் கொலை செய்தததுக்கு பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டல்லாஸில் ஒரு அப்பாவி ஹோட்டல் மேலாளர், அவரது மனைவி மற்றும் மகனுக்கு முன்பாக கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டார். இது மிகவும் கொடூரமானது. சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
யார் இந்த விவேக் ராமசாமி!
அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி,39, ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.















மேலும்
-
மின்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தெலுங்கானாவில் ரூ.2 கோடி ரொக்கம் மீட்பு
-
விவசாய உற்பத்தியை அதிகரிக்க உர பற்றாக்குறையை தவிர்க்கணும்; பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
-
மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு
-
திமுகவினர் கள்ளச்சாராயம் விற்கின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் புதிதாக 6000 ஓட்டுச்சாவடிகள்: ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது
-
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து: அசாமில் அரசு அதிகாரி கைது