சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

9


சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உள்பட பல்வேறு இடங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழக்கு விஷயமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற பதிவாளரின் இமெயிலுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து, நீதிமன்ற பணியாளர்களை வெளியே அனுப்பி விட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement