மின்சாரம் பாய்ந்து பெண் பலி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.

தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்தவர் மீனவர் வினோ. இவரது மனைவி பிரதிஷ்டா 30, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் குளிக்கச் சென்ற பிரதிஷ்டா மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரிக்கிறார்.

Advertisement